அரசு ஊழியர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டயாம் தேவை - TNPSC
TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
2020 டிசம்பர் துறைத் தேர்வுகள் பிப்ரவரி 14 முதல் 21-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளன.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விதிமுறைகள், பாடத்திட்டம், தேர்வு அமைப்பு முறை, தேர்வுமையம், தேர்வு கட்டணம், காலஅட்டவணை உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) மற்றும்(www.tnpscexams.in) ல் காணலாம்.
இந்தத்துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இருந்தால் மட்டுமே இனி HALL TICKET Download செய்யமுடியும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் நேற்று வெளியிட்ட
அறிவிப்பு:தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் ஒருமுறைப்பதிவு நிரந்தரப்பதிவில் கட்டாயமாக தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இதுவரை தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் விரைவில் பதிவு செய்ய வேண்டும்.
தேர்வாணையத்தால் இனிவரும் நாட்களில் நடத்தப்படவிருக்கும் கொள்குறிவகைத் தேர்வுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள OMR விடைத்தால் பல சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள OMR
விடைத்தாளின் மாதிரி படிவம், விடைத்தாளை கையாளும் முறை குறித்த விளக்க குறும்படமும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த கூடுதல் விளக்கம் தேவைப்படின் விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002ல் அலுவலக நேரங்களில்(காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) எல்லா வேலை நாட்களிலும் வருகிற 8ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம். தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
0 Comments